style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித் அடுத்ததாக 'சதுரங்கவேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் எனவும், படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் அஜித் - வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.