/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111_143.jpg)
எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித்‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார்.மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. ஆனால் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களைதவிர இதுவரை வேற எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும்வெளியாகவில்லை.
சமீப காலமாக அஜித் படங்களின்அறிவிப்புகளை வெளியிடாமலேயேபடத்தை எடுத்து வருகின்றனர். அதனால்அஜித்தின் முந்தைய படமான ‘வலிமை’ படத்திற்குஅவரது ரசிகர்கள் உள்ளூர் பிரபலம் முதல் உலக பிரபலங்கள் வரை அனைவரிடமும் பாரபட்சமின்றி அப்டேட் கேட்டு அதிர்ச்சியளித்தனர்.
இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதிஅதனை செல்போனில் படம்பிடித்து பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்றம் செய்துள்ளார்.இது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் இதுபோன்ற செயல்களை ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை. வலிமை படத்தின் போதே அப்டேட் கேட்டு யாரும் பிறரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.ஆனாலும்இதைபொருட்படுத்தாத ரசிகர் ஒருவர் கையில் பிளேடால் கிழித்து அப்டேட் கேட்டுள்ளார். இதனைஅவரது ரசிகர்களேஇதேபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)