Advertisment

மலேசியாவில் அஜித் ரசிகர்கள் சாதனை

Ajith fans record in Malaysia

Advertisment

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திரையரங்குகள்திருவிழாக்கோலம்பூண்டுள்ளன.

முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின்கொண்டாட்டம், அடாவடி, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனிடையே, மலேசியாவில் துணிவு பட வெளியீட்டை முன்னிட்டு அஜித்திற்கு 9.144 மீட்டர் உயரம் கோண்ட கட்அவுட் வைத்து அஜித் ரசிகர்கள் சாதனை படைத்துள்ளார். மலேசியாவில் எந்த நடிகருக்கும் இவ்வளவுஉயரம் கொண்ட கட்அவுட் யாரும் வைத்ததில்லை என்றும், அஜித்திற்கு தான் முதல் முறை என்றும் மலேசிய அஜித் ரசிகர்கள் சொல்கின்றனர்.

மேலும், ஒரு நடிகருக்கு அதிக உயரம்கொண்ட கட்அவுட் வைத்துள்ளதால் மலேசிய சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது.இதற்கான அங்கீகாரசான்றிதழ்துணிவு பட மலேசிய உரிமத்தை வாங்கிய மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த கட்அவுட் புகைப்படத்தையும் சாதனை சான்றிதழையும் அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ACTOR AJITHKUMAR Malaysia Thunivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe