Advertisment

'காணவில்லை'... விரக்தியில் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்!

ajith fans

Advertisment

'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'வலிமை'. பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் நிறைவடையாமல் தள்ளிப் போகிறது. பொதுவாக எதிர்பார்த்த தேதிகளை விட, படம் தள்ளிப்போகும் போது, சம்பந்தப்பட்ட பட நிறுவனம் ஏதாவது அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களைச்சோர்வடையாமல் வைத்துக் கொள்வதுவழக்கம். ஆனால், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் நிலைமையோ வேறாக உள்ளது.

அஜித் ரசிகர்கள், 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாகக் கேள்வியெழுப்பும் போது, பட நிறுவனம் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.ஒவ்வொரு முறையும் பிற நடிகர்களின் பட டீசரோ, ட்ரைலரோ வெளியாகும் போது, நம்பிக்கையை இழக்காத அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தீபாவளி நாளன்று, 'மாஸ்டர்' படத்தின் டீசரை வெளியிட்டு, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்த 'மாஸ்டர்' படக்குழு தயாராகி வரும் வேளையில், 'வலிமை' தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் விரக்தியடைந்த மதுரை அஜித் ரசிகர்கள், தங்கள் பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டிஇணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அதில், "காணவில்லை எனக் குறிப்பிட்டு உயர்திரு போனி கபூர் அவர்களே, சமூக வலைத்தளங்களில் கடந்த எட்டு மாதங்களாக 'தல 60' படமான 'வலிமை' குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. காத்திருக்கிறோம். தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்" எனஅச்சிடப்பட்டுள்ளது.

ajith fans
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe