Advertisment

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்!

valimai

எச். வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுமுதல் தற்போதுவரை படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்துவருகிறது. ஒரு கட்டத்தில், சமூக வலைதளங்களில் படக்குழுவினரிடம் அப்டேட் கேட்டு விரக்தியடைந்த அஜித் ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் படத்திற்கு தொடர்பில்லாத நபர்களிடம் 'வலிமை' அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இது ஒருவகையான ட்ரெண்டாக மாற, ரசிகர்களின் இந்தச் செயலுக்கு நடிகர் அஜித் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு, இந்தச் செயலை அஜித் ரசிகர்கள் தவிர்த்துவந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 'வலிமை' அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் பதாகை ஏந்தினார். மேலும், சில ரசிகர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்நாட்டு வீரரான அஷ்வினிடம் 'வலிமை' அப்டேட் கேட்டனர். இந்த இரு காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisment

valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe