Advertisment

காவலரை கடித்த அஜித் ரசிகர்கள்... காப்பு மாட்டிய காவல்துறை 

ajith fans arrested

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் நேற்று (24.2.2022) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்வெளியாகியுள்ளதால்அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்திருச்சி லால்குடியில் உள்ள ஒரு திரையரங்கின்வெளியே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பட்டாசுவெடிக்க முயன்ற ரசிகர்களை காவலர் சுரேஷ் தடுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் அருண்குமார் மற்றும் கோபிநாத் காவலர் சுரேஷின் கையை கடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

'வலிமை' படம் வெளியாவதில் தாமதமானதால் சில இடங்களில் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடிகள் மற்றும் மேற்கூரைகளைஉடைத்தசம்பவங்களை தொடர்ந்து தற்போது காவலரின் கையை கடித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

ACTOR AJITHKUMAR ajith valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe