Advertisment

விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் - சத்யஜோதி ஃபிலிம்ஸை நச்சரிக்கும் அஜித் ரசிகர்கள் 

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

Advertisment

viswasam fan made

viswasam fan made1

fans threat

Advertisment

fan threat2

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அஜித் மட்டுமல்லாது தம்பி ராமையாவும் இரண்டு கெட்-அப்புகளில் நடிக்கிறார். படத்தில் அஜித்திற்கு தாய்மாமன் அவர். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு உள்பட பல ட்ரெண்ட் நடிகர்கள் நடிக்கின்றனர். 'வீரம்' போலவே கிராமத்துக் கதை கொண்ட படமாக இது உருவாகிவருகிறது. விஜய் நடிக்கும் 'சர்க்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்க, அஜித் ரசிகர்களும் 'விஸ்வாசம்' படம் குறித்த தகவல்கள் வேண்டுமென இயக்குனர் சிவா, அஜித்தின் மக்கள் தொடர்பு அலுவலராக செயல்படும் சுரேஷ் சந்திரா, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ஆகியோரை சமூக ஊடகங்களில் அன்பாக நச்சரித்து வருகின்றனர்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

திடீரென நாளை (23-ஆகஸ்ட்-2018) ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஒரு தகவல் பரவியது. மீண்டும் குஷியான ரசிகர்கள், தகவலை உறுதிப்படுத்தக் கோரி சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தை மீண்டும் அதன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் தாங்களே போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். #wewantviswasamFLupdate என்ற ஹேஷ்டேகை உருவாக்கி பரப்பிவருகின்றனர். நாம் இதுகுறித்து சத்யஜோதி நிறுவனத்தை அணுகிய போது, 'இன்னும் உறுதியாகவில்லை' என்று தெரிவித்தனர்.

viswasam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe