அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் ‘வலிமை’ படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

ajith

மேலும் அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக அஜித் வைத்துள்ள புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் கருப்பு நிற முடியோடு இளமை தோற்றத்துக்கு மாறிய புகைப்படம் ஒன்று ஏற்கனவே வெளியானது. இது சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் தற்போது சால்ட் அன் பெப்பர் லுக்கில் கருப்பு கண்ணாடி அணிந்த இன்னொரு தோற்றம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன்மூலம் அஜித் வலிமை படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.