Advertisment

வைப் செய்யும் அஜித் - வைரலான வீடியோ!

ajith dance video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.

அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. முழு வீச்சில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது சிறிய இடைவெளி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிரேக்கில் அஜித் துபாய் சென்று தனது குடும்பத்தினருடன் நாட்களை கழித்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் கப்பலில் அஜித் சென்றிருக்கையில், இன்னொரு இடத்திலிருந்து அவரை அழைக்க அவரும் கை காட்டி ரியாக்ட் செய்யும் வீடியோ வைரலானது.

இதனை தொடர்ந்து தற்போது அஜித் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஷாலினி, அஜித்தின் மகள் அனோஷ்கா உள்ளிட்டோர் இருப்பது போல் தெரிகிறது. மேலும் அதில் ஒரு பெண்ணுடன் அஜித் மகிழ்ச்சியோடு ஆடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இன்று அனோஷ்காவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR AJITHKUMAR dubai vidamuyarchi
இதையும் படியுங்கள்
Subscribe