Advertisment

நெடுநாள் நண்பரின் தாய் மறைவு... அஜித் சோகம்!

நடிகர் அஜித் குமாரின் நீண்ட நாள் மேனேஜரும், சில முன்னணி நடிகர்களுக்கு பிஆர்ஓவாகவும் இருக்கின்ற சுரேஷ் சந்திராவின் தாயார் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

Advertisment

ajith suresh chandra

இச்செய்தியை அறிந்த அஜித், உடனடியாக சுரேஷ் சந்திராவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் தலையில் கருப்பு டை, உடலும் மெலிந்த தோற்றத்தில் இருந்தார்.கோலிவுட்டை சேர்ந்த திரைபிரபலங்கள் சுரேஷ் சந்திராவிற்கு போன் மூலமாகவே நேரில் சென்றோ ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisment

"சுரேஷ் சந்திராவுக்கும் அஜித்திற்குமான நட்பு அஜித்தின் முதல் படமான அமராவதி காலத்திலேயே தொடங்கியது. அமராவதி படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது, அதே பகுதியில் அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு நடிகரின் படப்பிடிப்பும் நடந்தது. அந்த விசயம் தெரிந்தவுடன், அமராவதி படக்குழு உள்பட அங்கு கூடியிருந்த மக்களும் அந்த நாயகரைப் பார்க்கச் சென்றுவிட்டனர். அனைவரும் சென்றபோதும் ஒருவர் மட்டும் அஜித்துடனேயே இருந்தார். அவரிடம் “நீங்க போகலயா?” என்று அஜித் கேட்க, “அவர்கள் எல்லோரும் இன்றைய நாயகனைப் பார்க்கப் போயிருக்காங்க, நான் நாளைய நாயகனுடன் இருக்கிறேன்” என்று கூறி அஜித்தை நெகிழவைத்த அந்த சுரேஷ் சந்திரா, பின்னர் அஜித் நற்பணி மன்றத்தின் தலைவராகவும் மன்றங்கள் கலைக்கப்பட்டபின் இன்று வரை அஜித்தின் பி.ஆர்.ஓவாகவும் அஜித்திற்கு நெருக்கமாக இருக்கிறார். அஜித் படங்கள் மட்டுமன்றி பிற படங்களுக்கும் மக்கள் தொடர்பு பணிகள் செய்துவருகிறார்.

suresh chandra ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe