Advertisment

கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித்

ajith busy in car race

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேளதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கீதா ஜீவன் திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு படத்தையும் பார்த்து மகிழ்ந்தார். சென்னையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்து படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இந்த நிலையில் அஜித் வெளிநாடுகளில் கார் ரேஸில் பிஸியாக உள்ளார். அவரது கார் ரேஸின் எக்ஸ் பக்கத்தில் அஜித் அவரது ரேஸ் காரை பார்வையிடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது. அஜித் கடந்த ஜனவரி முதல் துபாயில் தொடங்கி பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். அடுத்ததாக போர்ச்சுகலில் நடக்கும் போர்ஷே ஸ்பிரிண்ட் சேலஞ்ச் தெற்கு ஐரோப்பிய தொடரில் பங்கேற்கவுள்ளார்.

car race ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe