Advertisment

அனைத்து சாதனைகளையும் அடிச்சு தூக்கிய அஜித்...

இந்த வருட தொடக்கத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படத்துடன் வெளியானது அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'விஸ்வாசம்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

Advertisment

viswasam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழில் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வந்தது. நூறு நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது. பின்னர், பல போட்டிகளுக்கு இடையே இப்படத்திற்கான சேட்டிலைட் ரைட்ஸை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியது.

Advertisment

இந்நிலையில் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளுக்காக விஸ்வாசம் படம் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பியது. இந்நிலையில், மே தினத்துக்கான டிஆர்பி எனப்படும் கணக்குகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இதற்கு முந்தைய தமிழ் படங்களின் டிஆர்பி சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 'விஸ்வாசம்' முதலிடத்தைப் பிடித்துள்ளது. டிஆர்பி-யில் 18,143 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக 'பிச்சைக்காரன்' - 17696 புள்ளிகள், 'பாகுபலி 2' - 17070 புள்ளிகள், 'சர்கார்' - 16906 புள்ளிகள் என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

ajith viswasam
இதையும் படியுங்கள்
Subscribe