Advertisment

மாஸ்டராக மாறிய அஜித் - வீடியோ வைரல்

ajith bike video latest

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் இப்படப்பிடிப்பு நடந்து வந்தது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Advertisment

சமீபத்தில், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கி 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ajith bike video latest

திரைப்படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அஜித் மீண்டும் தனது பைக் டூர் பயணத்தை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று அஜித், நடிகர் ஆரவ் உள்ளிட்ட சிலருக்கு பைக் ஓட்டும் நுணுக்கங்களை சொல்லி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து, ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ACTOR AJITHKUMAR vidamuyarchi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe