அஜித் - எச். வினோத் - போனிகபூர் ஆகியோரது கூட்டணியில்மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் ஏகே61. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித் சில நண்பர்களுடன் பைக்கில் லடாக் பயணம் மேற்கொண்டுவருகிறார். அந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து அஜித் பயண வரைபடத்தைஅவரின் மேனேஜர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் உரையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அஜித்தை சந்திக்கும் அவரது ரசிகர்கள், ”உங்களை மூணு நாளா தேடிட்டு இருக்கோம்சார்..” என்று கூற, உடனே அஜித்,“தேடிட்டு இருக்கிங்களா... நா என்ன கொள்ளைக்காரனா இல்ல கொலைகாரனா” என்று சிரித்தபடி கேட்டார். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்... உங்களை எப்படியாவது பாக்கணும்னு ஆசையாய்சொல்ல, அதன் பிறகு அஜித் அவர்களின் விபரங்களைகேட்டு நலம் விசாரிக்கும்வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.