ajith bike tourism update

அஜித் குமார்தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா தயாரிக்கஅனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜனில் நடைபெற்று வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

திரைப் படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் அஜித். இந்த நிறுவனம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிகம் அறியப்படாத கண்கவர் இடங்களுக்குப் பயணம் செய்ய உதவும் வகையிலும் அந்த சுற்றுப் பயணங்களை நிர்வகிப்பதற்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் குழு வழிநடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இது பற்றிய டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதன்படி வீனஸ் மோட்டார் சைக்கிள்ஸ் டூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் முதல் சுற்றுப் பயணம் தொடங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாகஅந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ராஜஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், தாய்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அனுபவமிக்க நிபுணர்கள் பயணிகளுடன் சென்று கண்கவர் இடங்களைக் காண்பிப்பார்கள். மேலும் அவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்குவார்கள். அவர்களின் ஆர்வத்தை அனுபவிக்க பாதுகாப்பான சவாரி. அனைத்து வழித் தடங்களும் குழுவால் சரியாக ஆய்வு செய்யப்படுகின்றன. முதல் சுற்றுப் பயணம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டிற்கு வருகிற 23 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment