"உலகத்தை நேசி..." - நேபாளத்தில் அஜித்துடன் செல்ஃபி வீடியோ எடுத்த ரசிகர்

ajith bike tour nepal video

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களைத்தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்தார். அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை ‘அஜித் 62’ படத்தை முடித்துவிட்டு தொடர்வதாகத்திட்டமிட்டிருந்தார். ஆனால் படம் தாமதமாகி வருவதால் பயணத்தைஇப்போதே தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று நடிகர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படம் வைரலானநிலையில் தற்போது மற்றொரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நேபாளில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அவரை ஒரு ரசிகர் சந்தித்து செலஃபி வீடியோ எடுத்துள்ளார். அதில் அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில், "தென்னிந்திய சூப்பர் ஸ்டார்" எனப் பேசியுள்ளார்.

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Subscribe