Advertisment

பைக் ரைடு சென்ற அஜித்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ajith bike ride video viral in social media

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

Advertisment

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில்'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.

Advertisment

'வலிமை' படத்தின் பணிகளை நடிகர் அஜித் முடித்துள்ளதால், தன் நண்பர்களுடன் பைக் ரைடு சென்றுள்ளார். வடமாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித், சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான 'வாகா'வில் ராணுவ வீரர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது குஜராத்தில் உள்ள தோலவிரா பகுதியில் நடிகர் அஜித் பைக் ரைடு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்துவருகின்றனர்.

ACTOR AJITHKUMAR ajith valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe