நடிகர் விஜய் நடத்தி வரும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) மதுரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. மதுரை, பாரபத்தி கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மாநாட்டில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டுத் திடலுக்குத் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். மேலும் தொண்டர்கள் உற்சாகமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாட்டில் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றிணைந்து இருக்கும் பதாகையை சில தொண்டர்கள் எடுத்து வந்துள்ளனர். அதில் அஜித்திற்கும் த.வெ.க. கொடி போட்டு உற்சாக முழக்கமிட்டனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.