ajith and vignesh shivan ak62 movie official statement release

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.இதனைத்தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைந்துமுடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, 'ஏகே 62' படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் குறித்தஅறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து,இயக்குநர்விக்னேஷ் சிவன் நடிகர்அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். உங்களின் ’ஏகே 62’ படத்தை இயக்க வாய்பளித்ததற்குநன்றி அஜித் சார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வைசொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.