Advertisment

ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க தயாராகும் அஜித், மணிரத்னம்!

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்திலேயே மீண்டும் நடிக்க இருக்கிறார் அஜித். அந்த படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.

Advertisment

ajith maniratnam

அண்மையில் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால், எப்போது இந்த படத்தின் ஷூட்டிங் என்று தெரிவிக்காமல் படக்குழு மௌனமாகவே இருந்த நிலையில் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதேபோல செக்கச்சிவந்த வானம் படத்தின் ஹிட்டுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த படத்தில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்திய சினிமாத்துறையின் உட்ச நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். அண்மையில்கூட இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து சென்றிருந்தார் மணிரத்னம். இந்த படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில்தான் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி பூஜையுடன் ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு செய்திகளும் சமூகவலைதளத்தில் உலா வருவதினால் இருவரின் ரசிகர்களும் குஷியாக காத்திருக்கின்றனர்.

ajith kumar maniratnam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe