ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை - வெளியான சுவாரசியத் தகவல்

ajith ak62 heroine is trisha

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கசமுத்திரக்கனி உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில் படத்தின் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படத்தையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு 'ஏகே 62' எனத்தற்காலிகமாகத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'ஏகே 62' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அஜித்துடன் த்ரிஷா ஐந்தாவது முறையாக இணையவுள்ளார். இதுவரை அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளார்.

த்ரிஷா, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'குந்தவை' கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப்பெற்றுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து 'தி ரோட்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்திலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ராம்' படத்தில் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

ACTOR AJITHKUMAR AK62 trisha vignesh shivan
இதையும் படியுங்கள்
Subscribe