Published on 21/09/2022 | Edited on 21/09/2022

அஜித் - எச். வினோத் - போனிகபூர் ஆகியோரது கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் ஏகே 61. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு 'துணிவு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கியுடன் கேஷுவலாக படுத்திருப்பது போல் அமைந்துள்ளது. மேலும் இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.