Published on 06/10/2018 | Edited on 06/10/2018

அஜித்-சிவா கூட்டணியில் 4வது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர் அஜித் தற்போது ஒரு பள்ளிக்கு சென்ற சமயத்தில், அங்கிருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க கேட்டுள்ளனர். அப்போது அஜித், பள்ளியில் வேண்டாம், தப்பா நெனச்சிக்காதிங்க. ஒரு நாள் சொல்லி அனுப்புகிறேன் அப்போது கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். தயவுசெய்து கேமராவை நிறுத்துங்கள். பள்ளி நிர்வாகம் என்னிடம் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டுள்ளனர். நீங்கள் எல்லாம் சாப்பிட்டீர்களா" என்று அன்பாக கேட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.