Advertisment

"அன்புடன் அஜித்" - ரசிகர்களுக்கு அறிவுரை

ajith advice to fans

வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக குடும்பத்துடன் லண்டன் சென்ற திரும்பிய அவர், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47வது துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் அஜித் "காதுகளை பாதுகாத்து கொள்ளுங்கள்" என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் காதுகளினால் ஏற்படும் சில முக்கியமான பிரச்சனைகளை குறிக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து "அன்புடன் அஜித்" என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கு அஜித் அறிவுறுத்தி சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள இப்பதிவை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர்.

Advertisment

ACTOR AJITHKUMAR AK61
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe