Advertisment

‘குட், பேட், அக்லி’ - அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

ajith 63 announcement

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு, அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். இப்போது விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புற்காக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. படத்திற்கு குட், பேட், அக்லி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் பொங்கல் 2025ல் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

adhik ravichandran AK 63 ACTOR AJITHKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe