ajith 62 update

Advertisment

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான அஜித் குமார், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவர்களை குஷி படுத்தும் விதமாக கடைசியாக 'துணிவு' என்ற வெற்றி படத்தை கொடுத்திருந்தார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட்டார்.

விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் அஜித்தின் 52வது பிறந்தநாளைக் கொண்டாட தயாராகி வருகின்றனர் அவரது ரசிகர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிக்கும் 62வது பட அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற மே 1 அன்று (01.05.2023) மாலை டைட்டிலுடன் 'ஏகே 62' பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக பேசப்படுகிறது. இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என அஜித் இந்த அறிவிப்பை வெளியிட படக்குழுவிடம் சொன்னதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அஜித் தற்போது உலக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அது முடித்தவுடன் அஜித் 62-வது படத்தின்படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.