‘அஜித் 59’ படத்துக்கு போட்டியா மிஸ்டர் லோக்கல்?

mr. local

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மிஸ்டர். லோக்கல். நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசை அமைக்கிறார்.

கடந்த வாரம்தான் இந்த படத்திற்கான டைட்டிலை வெளியிட்ட படக்குழு, மேலும் இந்த படம் எப்போது வெளியாகும் என்கிற மற்றொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. வருகின்ற மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினமான அன்று இந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாவதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படமும் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சிவகார்த்திகேயனின் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தல 59 படத்தில் அஜித்துக்கு இருக்கும் காட்சிகள் அடுத்த மாதம்தான் படமாக எடுக்க இருப்பதாகவும், அந்த படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் எப்ரலில் முடிவடைந்து மே 1ஆம் தேதிக்கு தயார் நிலையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

mr.local sivakarthikeyan thala 59
இதையும் படியுங்கள்
Subscribe