Published on 04/03/2019 | Edited on 04/03/2019

அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம்தான் அஜித் 59. தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. குற்றவாளி கூண்டில் ஸ்ரதா ஸ்ரீநாத் உள்பட மூவர் நிற்கின்றனர். பின்னால் அஜித் வக்கீல் கோட்டுடன் சால்ட் & பெப்பர் ஸ்டைலில் நிற்கிறார். படத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை.