துணிவுபடத்தின் வெற்றியைத்தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை என்றாலும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் ஐடி மூலமாகத்தனது படங்களின் அப்டேட், ரசிகர்களுக்கு அவர் சொல்ல விரும்புவது எனக் கூறி வருவார். அந்த வகையில் சுரேஷ் சந்திரா, அஜித்தின் பைக் பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாகத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும்இது அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.