/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1300.jpg)
வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார், அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இப்படம் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே 61 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அஜித் தற்போது குடும்பத்துடன் லண்டனில் இருப்பதால் படக்குழு படத்தின் பிற காட்சிகளைபடமாக்கி வருகிறது. அஜித் இந்தியா திரும்பியவுடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைபடமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)