Advertisment

அஜய் தேவ்கன் பட ரிலீஸ் அப்டேட்

ajay devgn maidaan release update

Advertisment

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடைசியாக கைதி பட இந்தி ரீமெக்கில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கம் அகெய்ன், ரெய்டு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஷைத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே மைதான் என்ற தலைப்பில் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.

ajay devgan
இதையும் படியுங்கள்
Subscribe