Advertisment

லோகேஷ் படத்தின் கதையில் மாற்றம் செய்த பாலிவுட் நடிகர்

Advertisment

ajay devgan changed kaithi hindi remake naren character

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியிருந்தார். அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்இப்படத்தைஇந்தியில் 'போலா'என்ற பெயரில் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கி நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் அஜய் தேவ்கன் படத்தின் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கைதி படத்தில் கார்த்திக்கு அடுத்தபடியாக பலரின் கவனத்தையும் ஈர்த்தது போலீஸ் அதிகாரியாக நடித்த நரேனின் கதாபாத்திரம் தான். தற்போது இந்த கதாபாத்திரத்தை பெண் கதாபாத்திரமாக மாற்றி, அதில் பாலிவுட் நடிகைதபு நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ajay devgan kaithi lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Subscribe