/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/86_23.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழில் கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசானது.
இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நடிகர் அஜய் தேவ்கன் வாங்கியிருந்தார். 'போலா' என்ற தலைப்பில் இப்படத்தில் நடித்து அதனை இயக்கியும் உள்ளார். பொதுவாக, இந்தி ரீமேக்கில்அவர்களுக்கு ஏற்றாற்போல் கதையில் மாற்றம் செய்துஉருவாக்குவார்கள். அந்த மாற்றம் பல படங்களுக்கு ஒர்க்அவுட் ஆவதில்லை என்பது தான் பலரின் வருத்தம். இதற்கு உதாரணமாக 'போக்கிரி', 'காஞ்சனா', 'ராட்சசன்' என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளது கைதி படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா'.
'போலா' படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் தான் தற்போது இணையவாசிகளின் ட்ரோல் மெட்டீரியல். 'கைதி' படத்தைப் பார்த்து ஃபயர் விட்ட ரசிகர்கள் எல்லாம் 'போலா' பட டீசரை பார்த்து, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...', 'படத்தை கொலை செய்து விட்டார் அஜய் தேவ்கன்' என கமெண்ட்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.மேலும், கைதி பட ரசிகர்கள் 'இது கைதி படம் தானா...இல்ல வேறொரு படமா' என வருத்தத்தில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)