aiswarya aradhya

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் மும்பை மாநகரில் தினந்தோறும் பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

அண்மையில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி உள்ளிட்டோர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இதில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவமனையில் இருந்துகொண்டே அபிஷேக் பச்சன் ட்விட்டரின் வாயிலாக வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்களின் வேண்டுதலினால் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு எடுக்கப்பட்ட டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்துள்ளது. அவர்கள் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். நானும் எனது தந்தையும் மருத்துமனையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.