நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிட்த்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து ஐஸ்வர்யா ராய் பேசினார். அப்போது, “அஜித், மிக மென்மையான, அற்புதமான மனிதர். ரசிகர்களிடம் அவர் பெற்றிருக்கும் இந்த அன்பையும், வெற்றியையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு அவர் தகுதியானவர் தான்.
‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில், அவருடன் நான் நிறைய காட்சிகளில் நடிக்கவில்லை என்றாலும் படப்பிடிப்பில் அவரை சந்தித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது அவரது குடும்பத்தை சந்தித்ததும் என் நினைவில் உள்ளது. மீண்டும் நாங்கள் சந்தித்தால், அவரது இந்த தகுதியான வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.