Advertisment

தமிழில் அடுத்த படம்... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்...

உலக அழகி பட்டம் வாங்கிய பின் ஐஸ்வர்யா ராய், முதன் முதலில் நடிகையாக அறிமுகமான மொழி தமிழ்தான். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன் பின்தான் பாலிவுட்டில் பிரபலமாகினார். தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என அவ்வப்போது தமிழில் நடித்து வந்தார்.

Advertisment

aiswarya rai

இந்நிலையில் தமிழில் மணிரத்னம் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கியதை அடுத்து பொன்னியின் செல்வன் என்றொரு பிரமாண்ட படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியான உள்ளம் உள்ளன. தமிழ் நாவல்களில் மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று மணிரத்னம் பல வருடங்களாக முயற்சித்து வருகிறார். இது தற்போதுதான் நிறைவேறும் கட்டத்தில் உள்ளதாகவும், இதற்கான நடிகர்கள் தேர்வுகளை மணிரத்னம் நடத்தி வருவதாக பல தகவல்கள் வெளியாகின. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அமலா பால் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர்கள், தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர், “ உங்களுக்கெல்லாம் தெரியும். நான் என் குரு மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறேன்” என்றார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. முன்பு ஐஸ்வர்யா ராய் கான்ஸ் திரைப்பட விழாவிலும், “நான் அடுத்து மணிரத்னம் படத்தில்தான் நடிக்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe