aishwarya sushmitha shared his bad experience

Advertisment

மாடல் அழகியாக இருந்து திரைத்துறைக்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா சுஷ்மிதா. பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் 1 படம் மற்றும் மூன்று வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘பேட் காப்’ என்ற சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா சுஷ்மிதா, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்தில் அண்மையில் அளித்த பேட்டியில் பேசியுள்ள அவர், “நான் இண்டஸ்ட்ரியில் இருந்த ஆரம்ப காலத்தில் தான், இப்படியெல்லாம் கேள்விப்பட்டேன். நிறைய பேர் நிறைய கதை சொல்வார்கள். நான் அப்போது நடிப்பில் நுழையாத காலகட்டம். மாடலாக மட்டும் இருந்தேன். அப்போது நீங்கள் அவர்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்ளா விட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று கூறினர். நிச்சயமாக, அந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது.

சினிமா வாய்ப்புகளை பிடிக்க இது மட்டுமே வழி இல்லை. இங்கு யாரும் நம்மை கட்டாயப்படுத்த முடியாது. அவர்களின் அழைப்பை ஏற்று போக வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுப்பது நமது கையில்தான் உள்ளது.” என கூறியுள்ளார். இது பாலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.