Advertisment

விபத்தில் பலத்த காயம் - புகைப்படத்தை பகிர்ந்த நடிகை

Aishwarya Sharma injures arm on sets

Advertisment

இந்தியில் ஒரு தனியார் தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா. இப்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராககலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆபத்தான முறையில் மற்றும் சவாலான டாஸ்குகளைபிரபலங்கள் போட்டிப் போட்டு செய்வார்கள்.தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநர்ரோஹித் ஷெட்டி தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ஷர்மாவுக்கு விபத்து நடந்துள்ளது. விபத்தில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தை புகைப்படமாகஎடுத்து இதனைத்தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து பதிவிட்ட நடிகை ஆஷ்னா சிங், "ஏற்கனவே மிகவும் கஷ்டப்பட்டு, உங்களுக்கு ஆறுதல் சொல்ல நான் இருந்திருக்க விரும்புகிறேன். நீங்கள் வலிமையானவர் என்று சொல்ல விரும்புகிறேன், நான் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். லவ் யூ” எனப் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

accident Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe