Skip to main content

விபத்தில் பலத்த காயம் - புகைப்படத்தை பகிர்ந்த நடிகை

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Aishwarya Sharma injures arm on sets

 

இந்தியில் ஒரு தனியார் தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா. இப்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆபத்தான முறையில் மற்றும் சவாலான டாஸ்குகளை பிரபலங்கள் போட்டிப் போட்டு செய்வார்கள். தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி தொகுத்து வருகிறார். 

 

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ஷர்மாவுக்கு விபத்து நடந்துள்ளது. விபத்தில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தை புகைப்படமாக எடுத்து இதனைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து பதிவிட்ட நடிகை ஆஷ்னா சிங், "ஏற்கனவே மிகவும் கஷ்டப்பட்டு, உங்களுக்கு ஆறுதல் சொல்ல நான் இருந்திருக்க விரும்புகிறேன். நீங்கள் வலிமையானவர் என்று சொல்ல விரும்புகிறேன், நான் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். லவ் யூ” எனப் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்