"விலைமதிப்பற்ற புகைப்படம்" - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

aishwarya rajinikanth wishes vijayadhasami with shared rajinikanth photo

ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, பிரபல மலையாள நடிகர் விநாயகம் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், "இந்த ஃபிரேம் ஒருபோதும் தவறாக போகாது. இந்த முகமும் எப்போதும் தவறான கோணத்தில் இருக்காது. நேர்மறையான விலைமதிப்பற்ற புகைப்படம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Actor Rajinikanth aishwarya rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe