/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aishwaryad.jpg)
இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்தவகையில் இயக்குநரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யாவுக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.இத்தகவல் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)