aishwarya rajinikanth payani album song released

Advertisment

தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'பயணி' ஆல்பம் பாடலை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அங்கித் திவாரியும் பாடியுள்ளனர். இதன் ப்ரோமோ வீடியோ வெளியான நாள் முதலேஇந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பயணி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மகளுக்காக தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதே போன்று மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் வெளியிட்டுள்ளனர். நடுத்தர காதலை அழகாகவும், கலர்ஃபுல்லாகவும் காட்டியுள்ள 'பயணி' பாடல் பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது.