Aishwarya Rajinikanth Hindi Direction Debut Oh Saathi Chal film

Advertisment

தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பயணி என்ற ஆல்பம் பாடலைஇயக்கியிருந்தார். இப்பாடல்சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தி படம் ஒன்றைஇயக்கவுள்ளார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான ’3’, ’வை ராஜ வை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. நீண்ட வருடங்களாக படம் இயக்காமல் இருந்தஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'ஓ சாத்தி சல்' என்ற இந்திப் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம்முதல் முறையாக பாலிவுட்டில் இயக்குநராகஅறிமுகமாகவுள்ளார்.

உண்மையான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளஇப்படத்தை மீனு அரோரா தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.