தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக ‘லால் சலாம்’ படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் ஏழ்மையிலுள்ள இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி செலவிற்கு உதவ ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் தருவதாக கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதியளித்திருந்தார்.
அது தொடர்பான நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில் அவர்களிடம் முதற்கட்டமாக கடந்தாண்டிற்கான நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இந்தாண்டிற்கான உதவியை தற்போது வழங்கியுள்ளார்.
இயக்குநர் சங்க உறுப்பினர்களின் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் 102 பேருக்கு, கல்வி உதவித் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.