Advertisment

காதலர்களை மகிழ்விக்க வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

aishwarya rajinikanth create new album song

Advertisment

கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தனர். இதனை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கையின் மூலம் தனித்தனியே வெளியிட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா காதலர்தினத்தை முன்னிட்டு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். பே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளஇந்த இசை ஆல்பத்தில் ஐஸ்வர்யா இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்வைரலாகி வருகிறது. காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ளஇப்பாடல் காதலர்களை கவரும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Valentine's Day actor dhanush aishwarya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe