Skip to main content

"வெல்கம் பேக்" - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்திய கார்த்திக் சுப்பராஜ் 

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

karthik subbaraj

 

நடிகர் தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆல்பம் பாடல் உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அன்கித் திவாரியும் பாடியுள்ளனர்.

 

இப்பாடல் காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

ஒன்றிணைந்த ரஜினி - ஏ.ஆர் ரஹ்மான்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
lal salaam enters in to 3rd week

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். லைகா தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எங்க அப்பா சங்கி கிடையாது என பேசியது சர்ச்சையானது. பின்பு ரஜினியும் சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை என விளக்கமளித்திருந்தார். பின்பு ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 2ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முதல் நாள் திரையரங்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு கொடி அறிமுகம் செய்திருந்தனர் திருச்சி ரஜினி ரசிகர்கள். இதனிடையே படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இப்படம் 3ஆவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் படக்குழு ஒன்றிணைந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ரஜினி, ஏ.ஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.