
நடிகர் தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆல்பம் பாடல் உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அன்கித் திவாரியும் பாடியுள்ளனர்.
இப்பாடல் காதலர் தினத்தன்று வெளியாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Welcome back film-maker @ash_r_dhanush Best wishes for the launch of the music video tomorrow. pic.twitter.com/idLe1Dnipc
— karthik subbaraj (@karthiksubbaraj) March 7, 2022