Aishwarya Rajesh's Twitter account hacked

Advertisment

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி அளவில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடைசியாக 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே நாளில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான 'ரன் பேபி ரன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஃபர்ஹானா', 'சொப்பன சுந்தரி', 'துருவ நட்சத்திரம்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர்கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது பிஆர்ஓ யுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது கணக்கில் பதிவிடப்படுபவை குறித்து யாரும் சந்தேகிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்கிடம் ஐஸ்வர்யா ராஜேஷின் சார்பாக அவரது பிஆர்ஓ புகார்அளித்துள்ளார். அந்த பதிவில், "ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள்எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த ஜனவரி மாதம் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த கிஷோர் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இன்னும் அது சரி செய்யப்படவில்லை. இம்மாத தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். பின்பு மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைவில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கும் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.