Advertisment

விஜய்சேதுபதி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

Aishwarya Rajesh

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா, கடந்த ஒருவாரமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வந்தது. விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘க/பெ ரணசிங்கம்‘ உள்ளிட்ட தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டன.

Advertisment

விழாவின் முடிவில் சிறந்த படம் உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவான ‘க/பெ ரணசிங்கம்‘ படத்தில் அரியநாச்சி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவ்விருதானது அவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

aishwarya rajesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe