Advertisment

பாம்பே நடிகைகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழ் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ் 

aishwarya rajesh

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் 'கனா' படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசும்போது.... "முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கே மதிப்பு இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துகொண்டு இருக்கிறார்கள். நாம் ஒரு அமைப்பு ஆரம்பித்து அதற்கு உறுப்பினராக அவர்களை சேரச் சொன்னால் அவர்கள் வருவார்களா...? ஹிந்தியில் ஹிந்தி பெண்கள் நடிக்கிறார்கள், மலையாளத்தில் கேரள பெண்கள் நடிக்கிறார்கள், ஆனால், தமிழில் மட்டும்தான் தமிழ் பெண்கள் பெரும்பாலும் நடிக்கிறது இல்லை. ரெஜினா, சமந்தா இரண்டு பேரும் நன்றாக தமிழ் பேசுவார்கள். ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க வில்லை. பின்நாளில் அவர்கள் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக ஆனதுக்கு பிறகுதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தன்ஷிகா நன்றாக தமிழ் பேசுகிற ஹீரோயின். ஆனால், அவருக்கு படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இதேபோல் இருந்தும் அவர்களும் பெரிய படங்களில் நடிக்க முடிவதில்லை. இவ்வளவு ஏன் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் ஒரு திருச்சி பெண். மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய பிறகு தான் அனு கீர்த்தி யார் என்று நமக்குத் தெரிய வந்தது. இது போல் அனு கீர்த்திகள் நிறைய பேர் இங்கு உள்ளனர். நாம் தான் அவர்களை அடையாளம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மீறி நம் பெண்கள் நடிக்க வந்தால் அவர்களை மதிக்க மாட்டார்கள். ஒழுங்காக சாப்பாடு கூட போட மாட்டார்கள். பாம்பே பெண்களுக்குக் கிடைக்கின்ற மரியாதையை விட நமக்கு ஒரு படி குறைவாத்தான் கிடைக்கும். நம்ம ஊர் பெண்கள் அதிகம் நடிக்க வந்ததுக்குப் பிறகு ஒரு அமைப்பு ஆரம்பித்து, அதில் பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வைத்தால் எனக்கு சந்தோஷம் தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் செய்வதற்கு ரெடி. சினிமாவில் பெண்களுக்கு நடக்கிற பிரச்சினைகள் எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய பக்குவம் என்னிடம் வந்துவிட்டது. தவிர, எங்கள்பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அமைப்புகளும், ஆட்களும் இருந்தார்கள் என்றால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம்" என்று துணிச்சலாக கூறியுள்ளார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

taamilcinemaupdates aishwaryarajesh sivakarthikeyan arunrajakamaraja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe